தலைமை தளபதி பிபின் ராவத்க்கு மாடம்பாக்கம் வியாபாரிகள் சங்கம் அஞ்சலி
தலைமை தளபதி பிபின் ராவத் திருவுருவ படத்திற்கு மாடம்பாக்கம் வியாபாரிகள் சங்கம் அஞ்சலி செலுத்தியது.;
செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அடுத்த மாடம்பாக்கத்தில் மறைந்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் உயிரிழந்த இராணுவ வீரர்களுக்கு புகழஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாடம்பாக்கம் வியாபாரிகள் சங்கம் சார்பில் நடந்த இந்த நிகழ்ச்சியில் வியாபாரிகள் மற்றும் பொது மக்களும் முப்படை தளபதி பிபின் ராவத் திருவுருவ படத்திற்கு மலர் தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
மேலும் வியாபரிகள் மற்றும் பொதுமக்கள் 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தி தங்களது இரங்கலை தெரிவித்தனர். இந்த கோர விபத்து நாட்டினை பெரும் சோகத்தில் ஆழ்த்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் வியாபாரிகள் சங்க தலைவர் என்.சி செல்வகுமார், பொருளாளர் தேவராஜ், துணை தலைவர் எஸ்.தங்கராஜ், முன்னாள் கவுன்சிலர் தேனுபுரி, மாடம்பாக்கம் பேரூர்அதிமுக இலக்கிய அணி செயலாளர வெங்கட்ராமன் மற்றும் முன்னாள் ராணுவ வீர்ரரகள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.