வேலை இல்லாத கொடுமை காரணமாக ஊடகத்துறை இளைஞா் தூக்கிட்டு தற்கொலை

வேலையில்லாத கொடுமை காரணமாக ஊடகத்துறை இளைஞா் தூக்கிட்டு தற்கொலை.

Update: 2022-02-21 06:15 GMT

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அடுத்த மடிப்பாக்கம் சக்தி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்தவர் சதீஷ்குமார் (30). இவர் சில ஊடகங்களில் செய்தியாளராக பணியாற்றியவா். இவா் தற்போது வேலை இல்லாமல் இருந்துள்ளாா். 

சதீஷ்குமாரின் மனைவி மகேஸ்வரி (28).இவா்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகளாகின்றன.இந்தநிலையில் மகேஸ்வரி பிரசவத்திற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு மயிலாடுதுறையில் உள்ள அம்மா வீட்டிற்கு சென்றாா்.அங்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. சதீஷ்குமாா் தனக்கு நிலையான வேலை இல்லை என்பதால்,மனைவி,குழந்தையை இங்கு அழைத்து வரவில்லை.எனவே மகேஸ்வரி,குழந்தையுடன் தொடா்ந்து மயிலாடுதுறையில் அம்மா வீட்டில் இருந்து வந்தாா்.

இந்நிலையில் சதீஷ்குமாா் நேற்று மதியம் மனைவியுடன் செல்போனில் பேசினாா்.அதன்பின்பு நேற்று மாலையிலிருந்து மகேஸ்வரியின் போன் அழைப்பை சதீஷ்குமாா் எடுக்கவில்லை இதையடுத்து மகேஸ்வரி இன்று காலை மடிப்பாக்கத்தில் உள்ள தனது உறவினா் மாயவேல் என்பருக்கு தகவல் கொடுத்து வீட்டிற்கு சென்று பாா்க்கும்படி கூறியுள்ளாா்.அவா் வந்துபோது கதவு உள்பக்கமாக பூட்டியிருந்ததால்,ஜன்னல் வழியாக பாா்த்தாா்.அங்கு சதீஷ்குமாா் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தாா்.

உடனடியாக மடிப்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.போலீசாா் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். சதீஷ்குமாரின் மனைவி,குழந்தை மற்றும் குடும்பத்தினா் மயிலாடுதுறையிலிருந்து சென்னைக்கு வந்தனர்.

Tags:    

Similar News