சட்ட மாணவர்கள் விவகாரம் : தமிழக அரசுக்கு மனிதநேய மக்கள் கட்சி பாராட்டு

சட்டக்கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய போலீசார் மீது வழக்குப்பதிவு செய்த தமிழக அரசுக்கு மனிதநேய மக்கள் கட்சி பாராட்டை தெரிவித்துள்ளது.

Update: 2022-01-22 04:30 GMT

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தில் நடந்த மனித நேய மக்கள் கட்சி கூட்டம்.

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அடுத்த செம்பாக்கத்தில் மனிதநேயமக்கள் கட்சி மற்றும் தமுமுகவின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதில் சிறப்பு விருந்தினராக மனிதநேய மக்கள் கட்சியின் மாநில துணை பொதுசெயலாளர் யாகூப், தமுமுக மாநில செயலாளர் சலிமுல்லா கான், மமக மாநில இளைஞரணி செயலாளர் சேக் முகம்மது அலி ஆகியோர் கலந்துகொண்டு உரையாறினார்.

அதன்பின்னர் செய்தியாளர்களிடம் மமக பொதுசெயலாளர் தாம்பரம் யாகூப் கூறும்போது, அரியலூர் மாணவி லாவன்யா தற்கொலையை பாஜக அரசியலாக்கி வருகிறது. தமிழகத்தில் எத்தனையோ தற்கொலைகள் நடந்துள்ளது. நீட் தேர்வுக்காக எத்தனை தற்கொலை நடந்த போது குரல் கொடுக்காதா பாஜக தற்போது ஒரு மாணவி தற்கொலை சம்பவத்தை ஒரு மதப்பிரச்சனையாக திசை திருப்பி அரசியல் ஆதாயம் தேட முயற்சி செய்வதை வன்மையாக கண்டிக்கின்றோம்.

தமிழக அரசு வடிவமைத்து கொடுத்த நாட்டு விடுதலை போராட்ட வீரர்களின் நினைவை போற்றும் ஊர்திகளை மத்திய அரசு தடுத்துள்ளது. தமிழக விடுதலை போராட்ட வீரர்களின் நினைவுகளை தெரியப்படுத்த கூடாது என்பதற்காகவே தடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் ஊர்தியை அனுமதிக்க வேண்டும் எனவும் கேட்டுகொண்டார். கொடுங்கையூரில் சட்டக்கல்லூரி மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தில் தமிழக முதல்வர் உடனடியாக தலையீட்டு போலீசார் செயலை கண்டித்துள்ளார். மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட காவல்துறையினர் மீதே வழக்குப்பதிவு செய்துள்ள தமிழக அரசின் செயலுக்கு பாராட்டுகளை தெரிவித்துகொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News