தாம்பரம் தேசிய சித்த மருத்துவமனை சார்பில் வீடு தேடி மருத்துவம்
தாம்பரம் தேசிய சித்த மருத்துவமனை சார்பில் வீடு தேடி மருத்துவம் பார்க்கும் பணி நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டம், ராஜ கீழ்பாக்கத்தில் தாம்பரம் மாநகராட்சி அனைத்து குடியிருப்போர் நலச்சங்க இணைப்பு மையம் ஏற்பாட்டில் தாம்பரத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவமனையில் 5வது தேசிய சித்த மருத்துவநாளை முன்னிட்டு மழைகால சிறப்பு மருத்துவமுகாம் ராஜகீழ்பாக்கத்தில் நடைபெற்றது.
இந்த மருத்துவமுகாமில் நடமாடும் மருத்துவ வாகனத்தில் வீடு வீடாக சென்று இலவச சித்த மருந்துகள் பொதுமக்களுக்கு வழஙகப்பட்டது. குறிப்பாக நிலவேம்பு குடீநீர், சளி, இரும்மலை குணப்படுத்தும் திப்பிலி ரசாயனம், மழைகாலங்களில் ஏற்படும் சேற்று புண் மருந்துகள் உள்ளீட்டவை வழஙகப்ப்ட்டது.
இது குறித்து இணை பேராசிரியர் அருள் மொழி கூறும் போது, மத்திய ஆயுஸ் அமைச்சகம் மற்றும் தேசிய சித்த மருத்துவமனை இயக்குனர் பேராசியர் மீனாக்குமாரி ஆகியோரின் உத்தரவின்படி கடந்த 1ம் தேதி முதல் மழைகால சிறப்பு மருத்துவ முகாம் மக்களின் இருப்பிடத்திற்கே சென்று வழஙகப்படுவதாகவும்,
தினமும் 500க்கும் மேற்பட்டோருக்கும் சித்த மருந்ந்துகள் வழங்கப்பட்டுவருவதாகவும் அவர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் தாம்பரம் மாநகராட்சி அனைத்து குடியிருப்போர் நலச்சங்க இணைப்பு மையம் தலைவர், கோவிந்தராஜன், பொது செயலாளர் சீதாராமன், துணை தலைவர் நாராயணன், தளவாய்ராஜ், இணை செயலாளர் ரிசிகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.