தாம்பரம் அருகே 200 கிலோ குட்கா, பான்மசாலா பதுக்கிய, மளிகைக்கடைக்காரர் கைது

தாம்பரம் அருகே 200 கிலோ குட்கா, பான்மசாலா புதுக்கிய மளிகைக்கடைக்காரரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-07-07 07:30 GMT

தாம்பரம் அருகே குட்கா மற்றும் போதை பாக்குகள் பதுக்கிவைத்திருந்த மளிகைக்கடைக்காரர் கைது செய்யப்பட்டார்.

பம்மல் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் விநியோகம் செய்வதற்காக தமிழக அரசால் தடை செய்யபட்ட 200 கிலோ எடைகொண்ட குட்கா மற்றும் பான் மசாலாவை பறிமுதல் செய்த போலிசார் ஒருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் பம்மல் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தமிழக அரசால் தடைசெய்யபட்ட குட்கா மற்றும் பான் மசாலா பொருட்கள் விநியோகம் செய்யபட்டு வருவதாக சங்கர் நகர் காவல் நிலைய ஆய்வாளர் மகுடேஸ்வரிக்கு கிடைத்தது.இதனையடுத்து தனிபடை போலிசார் அதே பகுதி சஙகரன் தெருவில் மளிகை கடை நடத்தி வரும் சுடலைமணி (48) என்பரை கைது செய்தனர் .

மேலும் கடையின் பின்புறம் உள்ள வீட்டில் பதுக்கி வைக்கபட்டிருந்த 200 கிலோ எடை கொண்ட குட்கா மற்றும் பான் மசாலா பொருட்களை பறிமுதல் செய்தனர்.பின்னர் வழக்கு பதிவு செய்த போலிசார் சுடலமணியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News