சென்னை தாம்பரத்தில் மாபெரும் சிறு தானிய உணவுப் பெருவிழா
சென்னை தாம்பரத்தில் மாபெரும் சிறு தானிய உணவுப் பெருவிழா உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது.
சென்னை தாம்பரம் அடுத்த கிழக்கு தாம்பரத்தில் ரயில்வே மைதானத்தில் செங்கல்பட்டு மாவட்டம், உணவு பாதுகாப்பு துறை தாம்பரம் மாநகராட்சி இணைந்து சர்வதேச சிறு தானியங்கள் வருடம் 2023 முன்னிட்டு சிறு தானிய உணவுப் பெருவிழா உலக சாதனை நிகழ்வு மற்றும் சிறுதானிய தான்யன் Mascot வெளியீடு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் எஸ்.ஆர்.எம் உள்ளிட்ட 11 கல்லூரிகள் கலந்து கொண்டு சிறுதானிய உணவு பொருட்களை செய்து காட்சிப்படுத்தி அரங்குகளில் வைத்திருந்தனர்.
எஸ்.ஆர்.எம். உணவக மேலாண்மை கல்லூரி ஜாக்கரி 180கிலோ, நீர் 50 லிட்டர், வெஜிட்டெபிள் ஆயில் 100கிலோ, வெண்ணிலா 500எம்.எல், மற்றும் சாமை, தினை, குதிரைவாலி, வரகரிசி, பனி அரிசி, கேழ்வரகு, கம்பு, சோளம் உள்ளிட்ட சிறுதானியங்கள் அடங்கிய மிகப்பெரிய சிறுதானிய கேக் செய்து உலக சாதனை நிகழ்த்தியுள்ளது.
இந்த கேக் 551.05 கிலோ எடை, நீளம் 119 சதுர அடி, நீளம் 17 அடி, அகலம் 7½ அடி அகலம் கொண்டது. 18 மணி நேரத்தில் 60 மாணவர்கள், 60 ஆசிரியர்கள் சேர்ந்து செய்து அதனை அங்கீகரித்து Triumph வோல்டு ரெக்கார்ட் நிறுவனம் அங்கீகரித்து சான்றிதழ் வழங்கியுள்ளது. அதே போல் 160 சிறுதானியங்கள் கொண்டு செய்யப்பட்ட உணவு வகைகளை 30 மாணவிகள், 120 மாணவர்கள், 20 ஆசிரியர்கள் காட்சிப்படுத்தினர்.
நிகழ்வில் சிறப்பு விருந்தினராக சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், தாம்பரம் மாநகராட்சி ஆணையர் அழகுமீனா, தாமபரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி, செஃப் தாமு ஆகியோர் கலந்து கொண்டு உலக சாதனை கேக் மற்றும் அரங்குகளை பார்வையிட்டனர்.
எஸ்.ஆர்.எம்.உணவக மேலாண்மை கல்லூரி மாணவர்களுக்கு உலக சாதனை சான்றிதழை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்.
நிகழ்வில் பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன் தற்போது தான் சிறுதான்யத்தின் அருமை தெரிந்திருக்கிறது. அதனால் தான் அரசு மாவட்டம் தோறும் சிறு தான்யம் உட்கொள்வது குறித்து கண்காட்சி ஏற்படுத்தி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இறுதியாக அரங்குகளை பார்வையிட்டு அமைச்சர், தாம்பரம் ஆணையர், மேயர், செங்கலபட்டு ஆட்சியர் ஆகியோர் தேநீர் அருந்தினர்.