தாம்பரம் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் மாபெரும் சிறப்பு தடுப்பூசி முகாம்
சானிடோரியம் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் இன்று மாபெரும் தடுப்பூசி முகாம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.;
செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அடுத்த சானிடோரியம் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் இன்று நடைபெற்ற மாபெரும் சிறப்பு தடுப்பூசி முகாம் மாவட்ட ஆட்சியர் ஆர். ரகுநாத் தலைமையில் நடைபெற்றது.
இம்முகாமில், ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மேலும் இந்நிகழ்ச்சியில் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.