12ம் வகுப்பு கணித பாடத்தில் தோல்வி : மாணவர் தூக்கிட்டு தற்கொலை

கணிதபாடத்தில் தோல்வியடைந்த மாணவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.;

Update: 2021-12-03 06:45 GMT
தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவரின் இல்லம்.

தலைமை ஆசிரியரின் மகன் 12ம் வகுப்பு கணித பாடத்தில் தோல்வியடைந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்
சென்னை தாம்பரம் அடுத்த புது பெருங்களத்தூர், சீனிவாசன் நகரை சேர்ந்தவர் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் முருகதாஸ், இவர் மேல்மருவத்தூரில் உள்ள அரசு பள்ளியில் பணிபுரிந்து வருகிறார்.
இவரது மகன் ஜெயின் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கணித பாடத்தில் தோல்வியடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த கார்த்திகேயன்(16), வீட்டில் கயிற்றால் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவரது தாய் சென்று பார்த்த போது தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்தனர். மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பாக பீர்க்கன்காரணை போலீசார் விசாரித்து வருகின்றனர். 

Tags:    

Similar News