தாம்பரம் மாநகராட்சியில் மாமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு
நடந்து முடிந்த தாம்பரம் மாநகராட்சி தேர்தலில் வெற்றிபெற்ற 70 மாமன்ற உறுப்பினர்களுக்கும் மாநகராட்சி ஆணையர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்;
தாம்பரம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு முதல் மாநகராட்சி தேர்தலை சந்தித்தது. 70 வார்டுகளை கொண்ட மாநகராட்சியில் திமுக கூட்டணி கட்சி 54 இடங்களையும், அதிமுக 9 இடங்களையும், சுயேச்சைகள் 7 இடங்களையும் கைப்பற்றினர். அதிக இடங்களில் வெற்றி பெற்று திமுக மாநகராட்சியை கைப்பற்றியது.
70 மாமன்ற உறுப்பினர்களும் இன்று தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையர் இளங்கோவன் அவர்கள் உறுதி மொழியை வாசிக்க வைத்து பதவியேற்பு நடந்தது.
நிகழ்வில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், தாம்பரம், பல்லாவரம், மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அமைச்சர் பேசுகையில் தாம்பரம் மாநகராட்சியை சென்னைக்கு நிகராக தரம் உயர்த்த வேண்டும் என மாமன்ற உறுப்பினர்களிடையே கூறினார். இறுதியாக அனைத்து உறுப்பினர்களும் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.