கடப்பேரியில் திமுக வேட்பாளர் சுரேஷ் தேர்தல் பரப்புரை
தாம்பரம் கடப்பேரியில் 33வது வார்டு திமுக வேட்பாளர் சுரேஷ் ஏராளமான தொண்டர்களுடன் சென்று தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.;
கடப்பேரியில் தேர்தல் பரப்புரையில் திமுக வேட்பாளர் சுரேஷ்
சென்னை தாம்பரம் மாநகராட்சியில் 33வது வார்டு திமுக வேட்பாளர். செ.சுரேஷ் கடந்த சில தினங்களாக தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றார்.
அதன்படி இன்று கடப்பேரியில் ரங்கா தெரு, முத்தமிழ்நகர், குளக்கரை தெரு, அமர்நகர் ஆகிய இடங்களில் திமுக வேட்பாளர் செ.சுரேஷ் எராளமான தொண்டர்களுடன் பேரணியாக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது தனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியாக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்குமாறு கேட்டுகொண்டார்.
மேலும் தான் வெற்றி பெற்றால் இந்த பகுதியில் நீண்டநாள் குடிநீர் பிரச்சனை உடனடியாக தீர்த்து வைக்கபடும், அதேபோல் சேதமடைந்த சாலைகளுக்கு பதிலாக புதிய தரமான சாலைகள் அமைக்கப்படும், பட்டா இல்லாத மக்களுக்கு பட்டா வழங்கப்படும் என வாக்குறுதி வாக்குகளை சேகரித்தார்.