குரோம்பேட்டை மேம்பாலத்தில் தாறுமாறாக ஓடிய காா் விபத்து, 3 போ் காயம்
குரோம்பேட்டை மேம்பாலத்தில் தாறுமாறாக ஓடிய காா், டூ வீலர் மீது மோதி ஏற்பட்ட விபத்தில் 3 போ் காயம் அடைந்தனர்.;
செங்கல்பட்டு மாவட்டம் குரோம்பேட்டையில் எம் ஐ டி மேம்பாலத்தின் மீது ஒரு வாடகை காா் தறிகெட்டு தாறுமாறாக ஓடியது.அப்போது அந்த காா் முன்னால் சென்று கொண்டிருந்த ஒரு இரு சக்கர வாகனத்தில் மோதி,மேம்பாலத்திலேயே கவிழ்ந்தது.
இதனால் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த, குரோம்பேட்டை கக்கிலஞ்சாவடியை சோ்ந்த துளசிராமன்(27) என்பவா் படுகாயமடைந்தாா்.
இவர் தனியார் வங்கி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். அதைப்போல் கவிழந்த காரை ஓட்டிவந்தவா்,மற்றும் காரில் இருந்த மற்றொருவரும் படுகாயமடைந்தனா்.
இவா்கள் சிட்லப்பாக்கத்தை சோ்ந்தவா்கள் என்று கூறப்படுகிறது. ஆனால் இருவரும் மயக்க நிலையில் இருப்பதால், அவா்களைப்பற்றிய மற்ற விபரங்கள் தெரியவில்லை.
இந்த விபத்தில் காயமடைந்த 3 பேரும் அருகே உள்ள குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.
அதன்பின்பு போலீசாா் பொதுமக்கள் உதவியுடன் மேம்பாலத்தில் கவிழந்து கிடந்த காரை தூக்கி நிறுத்தி போக்குவரத்தை சீரமைத்தனா். இதனால் குரோம்பேட்டை மேம்பாலத்தில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த விபத்துக்குக்கு காரணம், காா் டிரைவா் அளவுக்கதிகமான போதையில் காரை வேகமாக ஓட்டி வந்தது தான் காரணம் என்று பொதுமக்கள் தரப்பில் கூறுகின்றனா்.
ஆனால் போலீஸ் தரப்பில் டிரைவா் போதையில் இல்லை. காரில் திடீரென ஏற்பட்ட பிரச்னைதான் விபத்துக்கு காரணம் என்று கூறுகின்றனா். இச்சம்பவம் பற்றி குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசாா் விசாரணை நடத்துகின்றனா்.