ஏரியில் மிதந்து வந்த 2 அடி முதலைக்குட்டி: பீதியடைந்த பொதுமக்கள்

தாம்பரம் அருகே, ஏரியில் இருந்து வந்த 2 அடி முதலை குட்டியை பிடித்து, பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

Update: 2021-09-25 10:00 GMT

ஏரியில் மிதந்து வந்த முதலைக்குட்டி.

செங்கல்பட்டு மாவட்டம்,  தாம்பரம் அருகே பெருங்களத்தூா்,  சதானந்தபுரம் எம்ஜிஆர் நகர் ஏரியில், 10 க்கும் மேற்பட்ட முதலைகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று காலை ஏரிக்கரையோரம், இரண்டு அடி நீளம் கொண்ட முதலை குட்டி ஒன்று தண்ணீா் கரையோரம் ஒதுங்கி இருந்தது.

ஏரியில் மீன் பிடித்து விளையாடிக்கொண்டிருந்த சிறுவா்கள் சிலா் இதை பாா்த்து, ஊா் மக்களிடம் கூறினர். தகவலின் பேரில் போலீஸ், வனத்துறைக்கு தகவல் கொடுத்தனா். இதனிடையே, மக்கள் நடமாட்டம் இருந்ததால், முதலை மீண்டும் தண்ணீருக்குள் செல்ல முயன்றது. அதற்குள், கனமான நைலான் கயிற்றால் கட்டி இழுத்து, முதலைக்குட்டியை வெளியே கொண்டு வந்து,  பாதுகாப்பாக அங்கு தனியாக வைத்தனர். 

அப்பகுதியினர் கூறுகையில், இந்த ஏரியில் 8அடி முதல் 10 அடி நீளம் கொண்ட 10 க்கும் மேற்பட்ட முதலைகள் உள்ளன. இதனால் அப்பகுதியில் வசித்து வருபவர்கள் தினமும் பதற்றத்துடன் இருந்து வருகின்றனர். வனத்துறை அதிகாரிகள்,  உடனடியாக முதலைகளை பிடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

Similar News