பைக் ரேசில் ஈடுபட வேண்டாம் -தாம்பரம் போக்குவரத்து உதவி ஆணையர் வேண்டுகோள்
கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் பைக் ரேசில் ஈடுபட வேண்டாம் என தாம்பரம் போக்குவரத்து உதவி ஆணையர் மாணவர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை தாம்பரம் அடுத்த பெருங்களத்தூரில் தாம்பரம் மாநகர போக்குவரத்து காவல்துறையினர் மற்றும் அன்னை வேளாங்கண்ணி பொறியியல் கல்லூரி மாணவர்கள் இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
போக்குவரத்து காவல் உதவி ஆணையர் சுரேஷ் தலைமையில் வாகன ஓட்டிகளிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது இருசக்கர வாகனத்தில் இருவரும் தலைகவசம் அணிய வேண்டும். இருசக்கர வாகனத்தில் இருவருக்கு மேல் பயணிக்க வேண்டாம். செல்போன் பேசியப்படி பயணிக்க வேண்டாம் எனவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற கல்லூரி மாணவர்களிடம் பைக் ரேஸ்சில் ஈடுபட வேண்டாம் எனவும் போக்குவரத்து காவல் உதவி ஆணையர் சுரேஷ் மாணவர்களிடம் வேண்டுகோள் விடுத்தனர். மேலும் போக்குவரத்து காவலர்களுக்கு கல்லூரி சார்பில் கவச உடை மற்றும் தாகத்தை தணிக்கும் மோர் ஆகியவை கல்லூரி சார்பில் அன்னை வேளாங்கண்ணி கல்வி குழும செயலாளர் D.தேவ் ஆனந்த் போக்குவரத்து காவலர்களுக்கு வழங்கினார். அதனை தொடர்ந்து சாலை பாதுகாப்பை வலியுறுத்தி மோட்டார் சைக்கிள் பேரணியும் நடைபெற்றது.