தடுப்பூசி விழிப்புணர்வு: தாம்பரம் ரயில் நிலைய முகப்பு பகுதியில் ஓவியம்

அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்பதை எடுத்துக்காட்டும் விதமாக தாம்பரம் ரயில் நிலைய முகப்பு பகுதியில் ஓவியம் வரையப்பட்டுள்ளது.;

Update: 2021-07-05 14:00 GMT

செந்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் ரயில் நிலையம் முகப்பு பகுதியில் கொரோனா தடுப்பூசி அனைவரும் போட்டுக்கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வை எடுத்துக்காட்டும் வகையில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது. இந்த ஓவியத்தை 20 நாட்களாக ரெனால்டு நிசான் மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா சார்பில் இந்த ஓவியங்கள் வரையப்பட்டது.

இதனின் சாராம்சமே அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டு தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டுமென்று எடுத்துக்காட்டும் விதமாக ஓவியம் வரையப்பட்டுள்ளது. இந்த ஓவியத்தை தாம்பரம் ரயில் நிலைய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், ஆர்.பி.எப் காவல் ஆய்வாளர் சந்திப், ஜி.ஆர்.பி.எஃப் துணைத் ஆய்வாளர் மாரியப்பன் மற்றும் ரெனால்டு நிசான் நிறுவனத்தின் துணைத் தலைவர் ராமகிருஷ்ணன் ராமநாதன், முதுநிலை மேலாளர் கணபதி, மேலாளர் கார்த்திகேயன் மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா நிறுவனத்தின் பொது மேலாளர் பத்மா, மற்றும் குழந்தைகள் உதவி மைய ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார் உறுப்பினர்கள் கோவிந்தன் மற்றும் சூரியகலா ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் தாம்பரம் ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் அங்கு பணி புரியும் பணியாளர்களும் ஓவியத்தை வியந்து பார்த்தனர்.

Similar News