தாம்பரத்தில்: விவசாய சங்கத்தினர் சட்ட நகல் எரிப்பு போராட்டம்!
தாம்பரத்தில் வேளான் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி விவசாய சங்கத்தினர் சட்ட நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடு முழுவதும் மூன்று வேளான் சட்டங்களை திரும்பப்பெற வலியுருத்தி பல்வேறு இடங்களில் சட்ட நகல் எரிப்பு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதேபோல் செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சண்முகம் தலைமையில் விவசாய சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.
அப்போது, வேளான் சட்டங்களின் நகல்களை எரித்து கண்டன கோஷமிட்டனர். காவல் துறையினர் அந்த சட்ட நகலை தண்ணீர் ஊற்றி அனைத்தனர். பின்னர் மீண்டும் கோஷமிட்டு கலைந்தனர்.
அங்கு பேட்டியளித்த மாநில பொது செயலாளர் சண்முகம், வேளான் சட்டங்கள் திரும்பப் பெறாவிட்டால் கொரோனா பேரிடர் தணிந்த பிறகு, அனைத்து விவசாயிகளையும் ஒன்று திரட்டி பாராளுமன்ற முற்றுகை போராட்டம் நடத்த போவதாக தெரிவித்தார்.
மேலும் கிராம மலைவாழ் மக்களுக்கு கொரோனா மருத்துவ வசதிகள் சென்றடையவில்லை. இதனை கவனத்தில் கொண்டு தமிழக அரசு உடனடி ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.