ஆன்லைன் ரம்மி : 20 லட்சம் இழப்பு, கார் டிரைவர் தூக்கிட்டு தற்கொலை
தாம்பரம் அருகே காா் டிரைவா் ஆன்லைனில் ரம்மி விளையாடி ரூ.20 லட்சத்திற்கு மேல் பணத்தை இழந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
செங்கல்பட்டு மாவட்டம் கிழக்கு தாம்பரம் அடுத்த ஆனந்தபுரம் ஜெகஜீவன்ராம் தெருவை சேர்ந்தவர் முருகன்(30). இவருடைய மனைவி பிரியா (24). இவர்களுக்கு திருமணமாகி ஒரு வருடம் ஆகிய நிலையில் சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது.
முருகன் காா் டிரைவராக வேலை பாா்த்து வந்தாா்.இந்நிலையில் இவா் ஆன்லைன் சூதாட்டத்திலும் ஈடுப்பட்டாா். ஆன்லைனில் தொடர்ந்து ரம்மி விளையாடியதால் ரூ.20 லட்சத்திற்கும் மேல் இழந்து,கடன்பட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் கடன் கொடுத்துவர்கள் தொல்லை கொடுத்து வந்ததாகவும் தெரிகிறது.
இதனால் மிகுந்த மனஉளைச்சலில் இருந்து வந்த முருகன் யாரும் இல்லாத சமையத்தில் தனது அறையில் மனைவியின் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மனைவி குழந்தை பிறந்து தாய் வீட்டில் இருக்கிறாா்.எனவே தனது மகனுக்கு உணவு கொடுப்பதற்காக தாய் நெம்மேலியம்மாள் சென்ற போது, முருகன் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இந்த சம்பவம் அறிந்து வந்த சேலையூர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரனை செய்து வருகின்றனர்.
திருமாண ஒரே வருடத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த காா் டிரைவா் ஒருவா்,இளம் மனைவியையும்,ஆண் குழந்தையையும் தவிக்கவிட்டுவிட்டு, தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.