தாம்பரம் ஆணையரகத்திற்குட்பட்ட காவல் நிலையங்களின் வரிசை குறியீடுகள் மாற்றம்

Tambaram Local News - தாம்பரம் ஆணையரகத்திற்குட்பட்ட காவல் நிலையங்களின் வரிசை குறியீடுகள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளன.

Update: 2022-06-22 03:34 GMT

Tambaram Local News - தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்திற்குட்பட்ட, காவல் நிலையங்களின் வரிசைக்குறியீடுகள் மாற்றப்பட்டுள்ளன.

தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகம், மூன்றாக பிரிக்கப்பட்டு, இந்தாண்டு, ஜனவரி மாதம் 1ம் தேதி முதல், சோழிங்கநல்லூர், செம்மொழி சாலையில் இயங்கி வருகிறது.

மொத்தம், 20 காவல் நிலையங்கள், இதன் கீழ் செயல்படுகின்றன. ஆணையரகம் பிரிக்கப்பட்டது முதல், சென்னை காவல் ஆணையரகத்தில் இருந்தபோது நடைமுறையில் இருந்த, வரிசைக்குறியீடுகளுடனேயே செயல்பட்டு வந்தன.

புதிய ஆணையராக சமீபத்தில் அமல்ராஜ்  பொறுப்பேற்ற பின், ஆணையகரத்தில் நிலவும், நிர்வாக சிக்கல்களுக்கு, படிப்படியாக தீர்வு காண முயன்று வருகிறார். இதன்படி, காவல் நிலையங்கள் மற்றும் ஆணையர் அலுலகத்திற்கு தேவைப்படும், ‛வாக்கி-டாக்கி'களின் எண்ணிக்கை விபரங்களை கேட்டுள்ளார்.

தொடர்ந்து, 20 காவல் நிலையங்களின் வரிசைக்குறியீடுகளும் மாற்றப்பட்டுள்ளன. புதிய குறியீடுகளின் படி, தாம்பரம் முதல் கானத்துார் வரையிலான காவல் நிலையங்கள், ‛T1 முதல் T20' வரிசையில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

அதேபோல், தாம்பரம், வண்டலுார், சேலையூர் ஆகிய, அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், ‛W' வரிசையில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.இதற்கான, அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக ஆணையர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News