தாம்பரத்தில் பெண்ணிடம் செயின் பறிப்பு: மூவருக்கு போலீஸ் வலை
கிழக்கு தாம்பரத்தில், பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட மூவரை போலீசார் தேடி வருகின்றனர்.;
சென்னை தாம்பரம் அடுத்த கிழக்கு தாம்பரம் மகாலட்சுமி தெரு, கணபதிபுரம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த சுதா(29) என்ற பெண்மணியிடம், இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் கழுத்தில் இருந்த 3 சவரன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.
மதியம் 3.30 மணியளவில், அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யும் நிலையத்தில் வேலை பார்த்து விட்டு, வீடு திரும்பிய போது அவரது எதிர்புறத்தில் நடந்து வந்து, கண்ணிமைக்கும் நேரத்தில் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு, இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பிச் சென்றனர். சம்பவம் தொடர்பாக சேலையூர் போலீசார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி செயின் பறிப்பு கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.