முதியவரை தாக்கி செல்போன், பணம் பறிப்பு: 15 நிமிடத்தில் குற்றவாளிகளை பிடித்த போலீஸ்

முதியவரை தாக்கி செல்போன், மற்றும் பணம் பறித்த வழக்கில் புகார் கொடுத்த 15 நிமிடத்தில் குற்றவாளிகளை போலீசார் பிடித்தனர்.;

Update: 2021-10-16 14:15 GMT

பைல் படம்.

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் பேருந்து நிறுத்தம் அருகே மீன் வியாபாரம் செய்யும் ரங்கராஜ்(71), என்பவரை பீர் பாட்டிலை உடைத்து காட்டி மிரட்டி, தாக்கி அவரிடமிருந்து 2500 ரூபாய் பணம், செல்போன் ஆகியவற்றை மூன்று பேர் கொண்ட கும்பல் பறித்து சென்றது.

இது குறித்து முதியவர் ரங்கராஜ் தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகார் அளித்ததும் உதவி ஆய்வாளர் தேவிகா என்பவர் அந்த எண்ணிற்கு தனது செல்போனில் இருந்து தொடர்பு கொண்டார், அப்போது அந்த செல்போன் பறித்துச் சென்றவர்களுக்கு தெரியாமல் அழைப்பு ஏற்கப்பட்டுள்ளது.

இதனை சம்யோஜிதமாக யோசித்த தாம்பரம் நுண்ணறிவு பிரிவு தலைமை காவலர் செல்போன் இணைப்பை துண்டிக்காமல், செல்போனை எடுத்துக் கொண்டு உதவி ஆய்வாளர் தேவிகா, நுண்ணறிவு பிரிவு தலைமை காவலர் மதுசூதனன், குற்றப்பிரிவு காவலர் பாண்டி ஆகியோர் செல்போனில் கேட்கும் சத்தத்தை வைத்து பேருந்து நிலையம் அருகே சென்றனர்.

அப்போது நடந்துனரிடம் சத்தம் கேட்டு, குறிப்பிட்ட இடத்தில் இருப்பதை அறிந்து சென்று உடனடியாக அவர்களை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றனர். அவர்களிடமிருந்து 2500 ரூபாய் பணம், செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் அவர்கள் கன்னடபாளையத்தை சேர்ந்த ரமேஷ்(21), பீர்க்கன்காரணையை சேர்ந்த ஆடு(எ) மணிகண்டன், கோயம்பேடை சேர்ந்த கார்த்திக்(எ) மெட்டுக்குளம் கார்த்திக்(26), என தெரியவந்தது.கைது செய்யப்பட்ட மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

புகார் கொடுத்த் 15 நிமிடத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களை கைது செய்த நுண்ணறிவு பிரிவு தலைமை காவலர் மதுசூதனன் உட்பட போலீசாரை பரங்கிமலை துணை ஆணையர் அருண்பால கோபாலன் பாராட்டினார்.

Tags:    

Similar News