குப்பை குவியலில் பற்றி எரியும் தீ ஆபத்தை உணராமல் மேயும் கால்நடைகள்
செங்கல்பட்டு மாவட்டம், வெங்கம்பாக்கம் மெயின் ரோடு, மப்பேடு பகுதி, அகரம் தென் ஊராட்சி குப்பையில் தீப்பிடித்து எரிகிறது
காலி இடத்தில் கொட்டிய குப்பை குவியலில் பயங்கர தீ விபத்து. தீயை உணராமல் கால்நடைகள் மேய்ந்து வருகின்றன.
செங்கல்பட்டு மாவட்டம், வெங்கம்பாக்கம் மெயின் ரோடு, மப்பேடு பகுதி, அகரம் தென் ஊராட்சி கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு சுடுகாடு அருகே உள்ள காலி இடத்தில் குப்பைகள் குவியல், குவியலாக மலைபோல் கொட்டப்பட்டுள்ளது.
இதற்கு அருகிலேயே குப்பைகள் கொட்டக்கூடாது மீறி கொட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் என அகரம் தென் ஊராட்சி அறிவிப்பு பலகையை வைத்துள்ளது. ஆனால் அதனை மீறி கொட்டப்பட்டுள்ள குப்பை குவியலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு கொளுந்து விட்டு எரிந்து வருகிறது.இதில் 30க்கும் மேற்பட்ட கால்நடைகள் ஆபத்தை உணராமல் மேய்ந்து கொண்டிருக்கின்றன. அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளியளிக்கிறது.