வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சிறைபிடிக்கப்பட்ட வாகனங்கள் ஏலம்
தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சிறைபிடிக்கப்பட்ட வாகனங்கள் ஏலம் விடப்பட்டது.;
சென்னை அடுத்த தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பல்வேறு விதிமுறைகளை மீறி செயல்பட்ட வாகனங்கள், குறிப்பாக வரி மற்றும் அனுமதிச்சீட்டு இல்லாமல் இயக்கப்படும் வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டு நீண்ட நாட்களாக விடுவிக்கப்படாமல் தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலக வளாகம் மற்றும், குரோம்பேட்டை மாநகர போக்குவரத்து பணிமனையில் சுமார் 156 பல்வேறு வகையான வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படிருந்தன.
இந்த வாகனங்களை வட்டார போக்குவரத்து அலுவலர் முக்கண்ணன் மற்றும் தானியங்கி பொறியாளர் மோட்டார் வாகன பராமரிப்புத்துறையினரின் முன்னிலையில் பொது ஏலம் விடப்பட்டது.156 வாகனங்களை 6.84 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போயின. இந்த பணம் போக்குவரத்து துறையில் செலுத்தப்பட்டது.