தாம்பரம் அருகே சகோதரர்கள் வெட்டி கொலை. உடல்கள் ஏரியில் வீச்சு
தாம்பரம் அருகே மணிமங்கலத்தில் சகோதரர்களை வெட்டிக்கொலை செய்து உடல்களை ஏரியில் வீசிவிட்டுச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.,;
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த மணிமங்கலம் அருகே சகோதரர்களான முகமது இஸ்மாயில் மற்றும் இமாம் அலி. இந்த இருவரும் இந்த பகுதியில் கஞ்சா விற்பனை, வழிப்பறி திருட்டு போன்ற குற்றச் சம்பவங்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்தனர்.
இதனால் இப்பகுதி மக்கள் ஒன்று சேர்ந்து இவர்களது குடும்பத்தினரை கிராமத்தை விட்டு ஒதுக்கிவைத்தனர். இன்னிலையில் இன்று காலை மணிமங்கலம் பகுதியில் உள்ள மாடம்பாக்கம் ஏரியில் சகோதரர்கள் இருவரும் கொலை செய்யப்பட்டு சடலமாக இருப்பதைக் கண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் கிடைத்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சகோதரர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்தில் மாவட்ட கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா நேரில் ஆய்வு மேற்கொண்டார்.