பம்மல் நகராட்சி சார்பில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் விழிபுணர்வு முகாம்

பம்மல் நகராட்சி சார்பில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் விழிபுணர்வு முகாம் நடைபெற்றது.;

Update: 2021-08-24 14:15 GMT

பம்மல் நகராட்சி சார்பில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் விழிபுணர்வு முகாமில் சுய உதவிக்குழுவினருக்கு மரக்கன்று வழங்கப்பட்டது. 

செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் அடுத்த பம்மல் நகராட்சி சார்பில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் விழிபுணர்வு முகாம் மற்றும் சென்னை மாநகராட்சி செல்வராணி தொழில் முனைவோர் அறக்கட்டளை இணைந்து நடத்தும் தொழில் முனைவோருக்கான விழுப்புணர்வு கூட்டம் பம்மல் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக நகராட்சி ஆணையர் மாரிச்செல்வி கலந்துகொண்டு மகளிர் சுய உதவி குழுவினருக்கு உரம் மற்றும் மரகன்றுகளை வழங்கி சுய தொழில் தொடங்குவதற்க்கான அலோசனைகளை வழங்கினார்.

கூட்டத்தில் கொரோனா குறித்த விழிப்புணர்வின் முக்கியத்துவத்தையும் அதனால் ஏற்படும் பாதிப்பு குறித்து அறிவுரைகளையும் இதனை தடுக்கும் பொருட்டு பாதுகாப்பது அறிவுரைகள் வழங்கப்பட்டன.

மேலும் இயற்கை உரம் தயாரிக்கும் முறையும், மக்கும் குப்பைகளை தரம் பிரித்து எவ்வாறு பதபடுத்தி உரம் தயாரிக்கும் முறைகளை புகைபடம் காண்பித்து விளக்கி கூறினர்.

இந்நிகழ்ச்சியில் சுகாதாரதுறை ஆய்வாளர் சுந்தர்ராஜன், செல்வராணி சுற்றுசூழல் அமைப்பின் நிறுவனர் செல்வராணி, எக்ஸ்னோரா எந்திரகுமார், செல்வராணி சுற்றுசூழல் அமைப்பின் ஆலோசகர் அப்பாவு, உட்பட மகளீர் சுய உதவி குழுவினர் ஏராளமனோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News