சேலையூர் காவல்நிலையத்தில் பணியின்போது உதவி ஆய்வாளர் மாரடைப்பால் மரணம்

சேலையூர் காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளர் பணியின்போது மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.;

Update: 2021-10-28 06:45 GMT

சேலையூர் காவல்நிலையத்தில் பணியின்பாேது உயிரிழந்த உதவி ஆய்வாளர் ஹரிராமன்.

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஹரிராமன் (57) இவருடைய மனைவி ராஜேஸ்வரி இவர்களுடைய மகன் பட்டதாரியான சோமகந்தன் (28). இவர் சேலையூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு பணியினை முடித்துவிட்டு இன்று மதியம் இரண்டு மணி அளவில் மீண்டும் சேலையூர் காவல் நிலையத்திற்கு பணிக்கு வந்த ஹரிராமன் திடிரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கினார். இதனை கண்ட சக காவலர்கள் குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே உதவி ஆய்வாளர் ஹரிராமன் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். பணியில் இருந்த உதவி ஆய்வாளர் காவல் நிலையத்திலேயே உயிரிழந்த சம்பவம் சக காவலர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பணியின் போது இறந்த உதவி ஆய்வாளரின் மகன் சோமகந்தனுக்கு அரசு வேலை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News