தாம்பரத்தில் பெண்களுக்கு எதிரான கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தாம்பரத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஒழிப்பு பேரணி நடைபெற்றது

Update: 2022-03-07 02:30 GMT

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி இந்திய மருத்துவ சங்க தாம்பரம் பிரிவு மற்றும் காஞ்சிபுரம் மகப்பேறு மருத்துவமனை சார்பில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஒழிப்பு  விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி இந்திய மருத்துவ சங்க தாம்பரம் பிரிவு மற்றும் காஞ்சிபுரம் மகப்பேறு மருத்துவமனை சார்பில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை ஒழிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

ஆண்டுதோறும் மார்ச் 8ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் மாநாடுகள் பேரணிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த ஆண்டு மகளிர் தினத்தை முன்னிட்டு இந்திய மருத்துவர்கள் சங்கம் ( தாம்பரம் பிரிவு) மற்றும் காஞ்சிபுரம் மகப்பேறு மருத்துவமனை சங்கம், மொனோபாஸ் சொசைட்டி ஆகியவை இணைந்து இன்று காலை விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

இப்பேரணி செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் ரயில் நிலையம் எதிரில் உள்ள இந்துமிஷின் மருத்துமனையில் அருகில் துவங்கிய இப்பபேரணியை தாம்பரம் மாநகர காவல்துறை ஆணையாளர் எம்.ரவி பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.பேரணி தாம்பரம் தாலுகா வரை சுமார் மூன்று கிலோமீட்டர் தூரத்திற்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட கலந்துகொண்டு பல்வேறு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி பேரணியில் ஈடுபட்டனர். இந்நிகழ்ச்சியில் இந்திய மருத்துவ சங்க தமிழக தலைவர் பழனிசாமி, உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஆதிலட்சுமி லோகமூர்த்தி, காஞ்சிபுரம் மகப்பேறு மருத்துவர் சங்கத்தலைவர் சக்கரவர்த்தி, தாம்பரம் இந்திய மருத்துவ சங்கம் (IMA )பிரிவு தலைவர் உமையான் முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News