பட்டாக் கத்திகளுடன் சுற்றித் திரிந்த ரவுடி துப்பாக்கி முனையில் கைது
தாம்பரம் அருகே பட்டாக் கத்திகளுடன் சுற்றித் திரிந்த ரவுடி துப்பாக்கி முனையில் போலீசார் கைது செய்தனர்.;
சென்னை தாம்பரம் அடுத்த பீர்க்கன்காரணை பகுதியை சேர்ந்தவர் விவேக் ராஜ் (28), இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. பீர்க்கன்காரணை காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளியான இவரை புகழ்ந்து இவரது ஆதரவாளர்கள் வீடியோ வெளியிட்டு அச்சுறுத்தி வந்தனர்.
விவேக் ராஜின் கூட்டாளியான ராகுலின் தம்பி பப்லு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய ரவுடி சேலையூர் லெனின் மற்றும் முகேஷ் அவர்களின் கூட்டாளிகளை கொலை செய்ய திட்டமிட்டு பட்டாக்கத்திகளை தயார் செய்து வைத்திருந்தனர்.
இந்நிலையில் ரவுடி விவேக் ராஜ் கோவளம் பகுதியில் பதுங்கி இருப்பது தெரிந்தது. தாம்பரம் ஆய்வாளர் சார்லஸ் தலைமையில் போலீசார் துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து விவேக்ராஜ் மற்றும் விஷால்(28), ஆகியோரை கைது செய்து. அவர்களிடமிருந்து 3 பட்டாக் கத்திகளை பறிமுதல் செய்தனர்.
பின்னர் இவர் மீது வழக்குப்பதிவு செய்த தாம்பரம் போலீசார் தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.