தாம்பரம் மாநகராட்சியில் 833 பேர் வேட்புமனு தாக்கல்
அதிமுக திமுக ஆகிய பிரதான கட்சிகளில் சீட் கிடைக்காதவர்களும் சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்வதில் ஆர்வம் காட்டினர்
தாம்பரம் மாநகராட்சியில் 833 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தாம்பரம் நகராட்சியில் போட்டியிட 833 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜனவரி 28ஆம் தேதி தொடங்கியதுதொடர்ந்து பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்து வந்தனர்.
அவர்களுடன் அதிமுக திமுக ஆகிய பிரதான கட்சிகளில் சீட் கிடைக்காதவர்களும் சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்வதில் ஆர்வம் காட்டி வந்தனர். வேட்பு மனு தாக்கலின் கடைசி நாளான வெள்ளிக்கிழமை பாஜக திமுக அதிமுக நாம் தமிழர் மக்கள் நீதி மய்யம் இந்திய தேசிய லீக் கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களும் மனு தாக்கல் செய்தனர்மொத்தம் உள்ள 70 வார்டுகளில் போட்டியிட 833 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். வேட்பு மனு மீதான பரிசீலனை நாளை நடக்க உள்ளது.