பாலியல் தொழிலில் ஈடுபட்ட 5 இளம்பெண்கள் மீட்பு: வாலிபர் கைது
பாலியல் தொழிலில் ஈடுபட்ட 5 இளம்பெண்கள் மீட்பு, ஒருவர் கைது. மற்றொருவர் தலைமறைவு;
சென்னை சேலையூர் அடுத்த, பழைய ஜி.எஸ்.டி.சாலை, இரும்புலியூர், பகுதியில் ஒரு வீட்டில் இளம் பெண்களை வைத்து, பாலியல் தொழில் நடப்பதாக, விபச்சார தடுப்பு பிரிவு ஆய்வாளர் கிருஷ்ணகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணித்த போது அங்கு பாலியல் தொழிலில் ஈடுபட்ட 5 இளம் பெண்களை மீட்டனர். இளம்பெண்களை ஆசை வார்த்தை கூறி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த சடையப்பன்(26), என்பவரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள முக்கிய நபரையும் தேடி வருகின்றனர்.