முடிச்சூர் சாலையில் சூப்பர் மார்க்கெட்டின் மேற்கூரையை உடைத்து கொள்ளை
தாம்பரம் அருகே சூப்பர் மார்க்கெட்டின் மேற்கூரையை உடைத்து 50 ஆயிரம் கொள்ளை: சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை;
சென்னை தாம்பரம் அடுத்த பழைய பெருங்களத்தூர் முடிச்சூர் சாலையில் தங்கம் சூப்பர் மார்க்கெட் இயங்கிவருகிறது. வழக்கம்போல நேற்று இரவு உரிமையாளர் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றவர் மீண்டும் காலை கடையை திறந்தபோது உள்ள கல்லாப் பெட்டியில் வைத்திருந்த ஐம்பதாயிரம் ரூபாய் பணம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
கடையின் மேல் கூரையை பிரித்து உள்ளே இறங்கி மர்ம நபர்கள் திருடி சென்றதும் தெரியவந்தது. இதுகுறித்து பீர்க்கன்காரணை போலீசாரிடம் புகார் அளித்ததன் பேரில், போலீசார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.