செங்கல்பட்டு அருகே பிஎம்கேவின் 33வது ஆண்டு தொடக்க விழா: இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்
செங்கல்பட்டு மாவட்டம் காயரம்பேடு கிராமத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் 33வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.;
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி வட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் காயரம்பேடு கிராமத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் 33வது தொடக்க விழாவை நடைபெ்றது. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவுருத்தலின் பேரில் மாவட்டச் செயலாளர் காரணை இராதாகிருஷ்ணன் வழிகாட்டுதலின் பேரில் செங்கல்பட்டு மத்திய மாவட்ட துணைச் செயலாளர் காயரம்பேடு தேவராஜ் தலைமையில் கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கட்சியின் நிர்வாகிகள் காயரம்பேடு நெப்போலியன் வீரராகவன் பார்த்திபன் சுரேஷ் உட்பட பாமக நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.