சென்னை முடிச்சூரில் 3 சகோதரிகள் கேன்சர் நோயாளிகளுக்காக முடி தானம்

சென்னை முடிச்சூரில் 3 சகோதரிகள் கேன்சர் நோயாளிகளுக்காக முடி தானம் செய்துள்ளனர்.;

Update: 2022-04-27 15:30 GMT

முடி தானம் செய்த சகோதரிகள்.

சென்னை முடிச்சூர் எஸ்.கே. அவென்யூ நகரை சேர்ந்தவர் ஹரிபிரசாத், கிருஷ்ணவேணி தம்பதியின் மூத்த மகள் லக்சயா. இவர் 5ம் வகுப்பு படித்து வருகின்றார். இவருடைய சித்தி மகளான ஸ்மிதி, ஸ்வாதி லண்டனில் படித்து வருகின்றனர். விடுமுறைக்காக சென்னை வந்திருந்த நிலையில் சகோதரிகள் மூன்று பேரும் இணைந்து கேன்சர் நோயாளிகளுக்காக தலா 11 இன்ச் முடிகளை தானம் செய்தனர். புத்தகத்தில் கேன்சர் நோயாளிகளுக்கு முடி தானம் செய்வது குறித்து அறிந்துள்ள இந்த சிறுமிகள் 3 பேரும் தானம் செய்ய முன் வந்தனர்.

இது குறித்து மாணவி லக்சயா கூறும்போது, கேன்சர் நோயாளிகள் தங்களது முடிகளை இழந்து மிகுந்த மன வருத்தில் இருக்கும் நிலையில் தங்களது முடிகளை தானம் செய்து அவர்களுக்கு வழங்கும் போது சிறிய மகிழ்ச்சி அளிக்கும். இதுபோன்று தொடர்ந்து தான் முடிகளை தானம் செய்ய இருப்பதாகவும் தெரிவித்தார்.

Tags:    

Similar News