மீண்டும் சென்னை வந்த 'அண்ணாத்தே' ரஜினி

அண்ணாத்தே படப்பிடிப்பு நிறைவு;

Update: 2021-05-12 11:48 GMT

ரஜினியின் புதிய படமான அண்ணாத்தே கடந்த ஆண்டு இறுதியில் ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. அப்போது அண்ணாத்த படப்பிடிப்பு குழுவினரில் நான்கு பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்கள்.

இதையடுத்து ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த அண்ணாத்த படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.ரஜினி காந்திற்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில்,நெகடீவ் என்று வந்தது.ஆனாலும் ரஜினிக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.இதையடுத்து ரஜினிகாந்த் அங்குள்ள தனியாா் மருத்துவமனையில் தங்கி சிகிச்சைப்பெற்றாா்.கடந்த டிசம்பா் 27 ஆம் தேதி ஹைதராபாத்திலிருந்து தனி விமானத்தில் சென்னை திரும்பினாா்.

இந்நிலையில் தடைப்பட்டிருந்த அண்ணாத்தே படப்பிடிப்பை தொடா்ந்து நடத்த முடிவு செய்தாா்.அதன்படி கடந்த மாதம் 8 ஆம் தேதி சென்னையிலிருந்து தனி விமானத்தில் ஹைதராபாத் சென்றாா்.அங்கு படப்பிடிப்பு கடந்த ஒரு மாதமாக தொடா்ந்து நடந்தது.கடந்த 10ஆம் தேதி படப்பிடிப்பு முடிந்தது.

இந் நிலையில் ரஜினிகாந்த் இன்று பகல் 11.50 மணிக்கு தனி விமானத்தில் ஹைதராபாத்திலிருந்து சென்னை பழைய விமானநிலையம் வந்தாா்.பின்பு விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்துக்கு புறப்பட்டு சென்றார்.

Tags:    

Similar News