நடந்து செல்லும் பெண்களிடம் சில்மிஷம் செய்த வாலிபர் கைது

வேளச்சேரியில் நடந்து செல்லும் பெண்களிடம் சில்மிஷம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.;

Update: 2021-12-16 12:45 GMT

பைல் படம்

சென்னை புழுதிவாக்கம்- வேளச்சேரி உள் வட்ட சாலையில் தினந்தோறும் நடைபயிற்சி மேற்கொள்வதை வாடிக்கையாக கொண்ட பெண் ஒருவரை அடிக்கடி ஒரு இளைஞர் நடைபயிற்சி மேற்கொண்டிருக்கும் போது பின்னால் தட்டி விட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் செல்வதாக வேளச்சேரி போலிசில் புகார் தெரிவித்திருந்தார்.
அதனடிப்படையில் வேளச்சேரி போலீசார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி அந்த நபரை தேடி வந்தனர்.இந்நிலையில் நேற்று மீண்டும் அந்த நபர் அதே பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.
இது குறித்து தகவலறிந்த போலீசார் அந்த இளைஞரின் வாகன பதிவெண்ணை வைத்து அவரது வீட்டிற்கே சென்று கைது செய்து மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அவர் கைவேலியை சேர்ந்த ஆதம் அலி(27), என்பதும் நடந்து செல்லும் பெண்களின் பின்னால் தட்டி விட்டு செல்வதை தொடர்ச்சியாக செய்து வந்ததும் தெரியவந்தது. இவன் மீது ஏற்கனவே மாங்காடு காவல் நிலையத்தில் இதே போன்ற ஒரு புகாரும் உள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்கள் இந்த சம்பவத்தை வெளியில் சொல்லவும், புகார் தரவும் தயங்குவதால் இவன் தொடர்ந்து இது போன்ற சம்பவத்தில் தைரியமாக ஈடுபடுவதாக போலீசார் தெரிவித்தனர்.
இவன் மீது வழக்குப்பதிவு செய்து மடிப்பாக்கம் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

Tags:    

Similar News