மடிப்பாக்கத்தில் மின்புதைவட கேபிள் தீப்பற்றி எரிந்து வெடித்தது
மடிப்பாக்கத்தில் பூமிக்கடியில் செல்லும் மின்புதைவட கேபிள் தீப்பற்றி எரிந்து படபடவென வெடித்தது.
சென்னை மடிப்பாக்கம், ராம்நகர் தெற்கு, 6 வது தெருவில் பூமிக்கடியில் செல்லும் மின் புதை வட கேபிள், சாலையில் மழை நீர் தேங்கி இருப்பதால் திடீரென புகை வர துவங்கியது, சிறிது நேரத்தில் படபட வெடித்து சிதற ஆரம்பித்தது.
இதனை கண்ட குடியிருப்பு வாசிகள் இது குறித்து மடிப்பாக்கம் மின் வாரிய அலுவலகத்தில் தகவல் தெரிவித்தனர், மின் வாரிய ஊழியர்கள் உடனடியாக மின் இணைப்பை துண்டித்து விட்டு, தீப்பற்றி எரிந்து போன புதைவட கேபிளை சரிசெய்தனர்.
மழைக்காலம் என்பதால் மழை நீர் கேபிளில் பட்டு தீப்பற்றி எரிந்து வெடித்திருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த தீ விபத்தினால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை.