சென்னை அருகே 10 ஆண்டுகளுக்கு பிறகு விமரிசையாக நடைபெற்ற தீமிதி திருவிழா
செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் படவேடு ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோயில் திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்பு
10 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. பக்தர்கள் தங்களது நேர்த்திகடனை தீக்குழியில் இறங்கி நிறைவேற்றினர்.
சென்னை அருகே சோழிங்கநல்லூரில் உள்ள அருள்மிகு படவேடு ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோயிலில், 4ம் ஆண்டு தீமிதி திருவிழா மேளதாளத்துடன் வான வேடிக்கை முழங்க பக்தர்கள் ஓம் சக்தி, பரா சக்தி என கோஷமிட வெகு விமர்சையாக நடைபெற்றது. கோயில் திருப்பணி மற்றும் கொரோனா பரவல் காரணமாகவும் கடந்த 10 வருடங்களாக நடைபெறாமல் இருந்த தீமிதி திருவிழா போலீசார் பாதுகாப்புடன் நடைபெற்றது. . கடந்த 4ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கிய தீமிதி திருவிழாவில் பக்கதர்கள் விரதமிருந்து தீ மிதித்தனர்.
அலகு குத்தியும், வாயில் 6 அடி நீளமுள்ள வேல் குத்தியும், உடல் முழுவதும் வேல் குத்தியும், நடனமாடியபடியும், அம்மன் போன்று வேடமிட்டும் பக்தர்கள் பூக்குழியில் இறங்கி தங்களது நேர்த்திகடனை செலுத்தினர். கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் தீமிதி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.