பள்ளிக்கரணையில் சாலையிலேயே குடிநீரை வீணாக திறந்து விட்ட ஓட்டுனர்

Supply Of Drinking Water - சென்னை பள்ளிக்கரணையில் சாலையிலேயே குடிநீரை வீணாக திறந்து விட்ட ஓட்டுனரால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-09-09 05:00 GMT

மினி குடிநீர் லாரியில் இருந்து தண்ணீர் வீணாக சாலையில் திறந்து விடப்பட்டது.

Supply Of Drinking Water - சென்னை பள்ளிகரணையில் போக்குவரத்து விதிமுறையை மீறி சாலையின் எதிர் திசையில் மினி தண்ணீர் லாரியை வாகன ஓட்டுனர் ஓட்டி வந்தார். மழையின் காரணமாக சாலையில் ஓரம் சேறும் சகதியாக இருந்ததில் மினி தண்ணீர் லாரி சிக்கி நின்றது.இதனால் லாரியில் இருந்த குடிநீரை சாலையிலேயே திறந்து விட்டதால் சாலை முழுவதும் தண்ணீர் ஆறாக ஓடியது.

தனது வாகனம் சிக்கிக் கொண்டதால் வாகனத்தை எடுக்க அவ்வாறு செய்ததாக ஓட்டுநர் கூறி பின்னர் லாரியை எடுத்துச் சென்றார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் மினி லாரியை அங்கிருந்து எடுத்துக் கொண்டு சென்று விட்டார்.

குடிநீரை வீணாக்காதீர் என்ற விளம்பரம் மட்டும் எழுதி வைத்து விட்டு குடிநீரை அதிகம் வீணாக்குவதே குடிநீர் லாரி ஓட்டுனர்கள் தான் என்கின்றனர் இதனை பார்த்தவர்கள்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2 

Tags:    

Similar News