சிலம்பப்போட்டிக்கு செல்லும் மாணவர்களுக்கு நிதியுதவியளித்த தாம்பரம் காவல் ஆணையர்
கண்ணகி நகரில் இருந்து சிலம்பம் போட்டியில் கலந்து கொள்ள செல்லும் மாணவர்களுக்கு தாம்பரம் காவல் ஆணையர் நிதி உதவி செய்தார்;
கண்ணகி நகரில் இருந்து சிலம்பம் போட்டியில் கலந்து கொள்ள செல்லும் மாணவர்களுக்கு தாம்பரம் காவல் ஆணையர் நிதி உதவி செய்தார்.
சென்னை கண்ணகி நகரில் வசிக்கும் பள்ளி மாணவர்கள் அம்பேத்கர் இரவு பாட சாலையில் பயின்று வருகின்றனர். இங்கு சிலம்பம் உள்ளிட்ட போட்டிகள் கற்றுத் தரப்படுகிறது.
இங்கு பயிலும் மாணவர்களில் ராஜலட்சுமி, எலிஷா, ரோசினி, சஞ்சய், சந்தியா உள்ளிட்ட 12ம் வகுப்பு மாணவர்கள் ஏப்ரல் 2ம் தேதி நேபால் நாட்டில் நடைபெறும் மாணவர்களுக்கான ஆல் கேம்ஸ் ஆக்டிவிட்டிஸ் டெவலப்மெண்ட் பவுண்டேசன் பெஸ்ட் ஸ்போர்ட்ஸ் பிரமோசன் என்ற பெயரில் சர்வதேச அளவில் நடைபெறும் சிலம்பம் போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர். இந்த போட்டிக்கு செல்லவிருக்கும் மாணவ மாணவிகளுக்கு, தலா 15000 ரூபாய் நிதி உதவியினை தாம்பரம் காவல் ஆணையர் ரவி மற்றும் தொண்டு நிறுவனம் இணைந்து வழங்கப்பட்டது.மாணவர்கள் செல்ல பணம் இல்லாத நிலையை அறிந்த கமிஷனர் ரவி உடனடியாக உதவியது அவர்களுக்கு பேருதவியாக அமைந்தது. பின்னர் மாணவர்கள் தங்கள் சிலம்ப திறமையினை வெளிப்படுத்தினர். அதனை கமிஷனர் கண்டு களித்தார்.
இறுதியாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஆணையர் ரவி அவர்கள் குடிசை மாற்று குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் குறிப்பாக கண்ணகி நகர், பெரும்பாக்கம், உள்ளிட்ட பகுதிகளில் விடியல், வெளிச்சம், உதயம் திட்டத்தினை கொண்டு வந்து அங்கு வசிக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், பெண்களுக்கு பணிகளை உருவாக்கிடவும், குற்றச் செயல்களில் ஈடுபடும் சிறார்களுக்கு ஆலோசனைகளை வழங்குவது, குற்றச்செயல்களில் ஈடுபடாதவாறு அவர்களை உருவாக்குவது என செயல்படுத்தப்படும் என்றார்.
அதன் பிறகு கண்ணகி நகர் காவல் நிலையம் அருகே மாணவர்களுக்கு விளையாட உருவாக்கட்டு வரும் மைதானத்தை பார்வையிட்டார். மைதானத்தை பார்வையிட்டதை தொடர்ந்து போலீஸார் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் திடீரென ஆணையர் ரவி, கண்ணகி நகர் காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது சரித்திர பதிவேடு பட்டியலை எடுத்துப்பார்த்து விட்டு ஏ பிளஸ் கேட்டகிரியில் உள்ள ரவுடிகளின் விவரங்களை ஆய்வாளரிடம் கேட்டதற்கு, ஒரு நிமிடம் ஆய்வாளர் முருகன் திக்குமுக்காடி போய் ஒரு வழியாக விவரத்தை சொல்லி முடித்தார்.