புறநகர் பகுதியில் நிரம்பிய ஏரிகள் : பள்ளிகரணையில் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்
புறநகர் பகுதியில் ஏரிகள் நிரம்பியதால் பள்ளிகரணையில் குடியிருப்புகள் வழியாக வெள்ள நீர் பாயந்து ஓடுகிறது.;
பள்ளிக்கரணை பகுதியில் வீடுகளை சூழ்ந்த வெள்ள நீர்.
சென்னை பள்ளிகரணை சுண்ணாம்பு கொளத்தூர், மேற்கு அண்ணா நகர், காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகள் பள்ளிகரணை நாராயணபுரம் ஏரியை சுற்றி இருக்கின்றன.
தொடர்ந்து பெய்து வரும் கன மழையின் காரணமாக புறநகர் பகுதியில் அனைத்து ஏரிகளும் நிரம்பி ஏரியிலிருந்து வெளியாகும் உபரி நீரானது குடியிருப்புகளின் வழியாக வருவதால் பள்ளிகரணை சுண்ணாம்பு கொளத்தூர், மேற்கு அண்ணா நகர் பகுதிகளில் குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்துள்ளது. சில வீடுகளிலும் மழை நீர் புகுந்துள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரு தினங்களாக மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளதால் மழையினால் அவதியுறும் மக்கள் மின் இணைப்பும் இல்லாமல் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
நாராயணபுரம் ஏரியும் முழுமையாக நிரம்பி சாலையில் ஏரி நீர் ததும்பி வந்து கொண்டிருக்கிறது.