மாநில அளவிலான சப் ஜூனியர் இலக்குப்பந்து போட்டிகள்: கோவை மாவட்ட அணி முதல் இடம்

மாநில அளவிலான சப் ஜூனியர் ஆடவர் மற்றும் மகளிருக்கான இலக்குப்பந்து போட்டிகள்: கோவை மாவட்ட அணி முதல் இடம் வென்றது

Update: 2022-03-01 05:30 GMT

சப் ஜூனியர் ஆடவர் மற்றும் மகளிருக்கான இலக்குப்பந்து போட்டி மற்றும் நடுவர் தேர்வு சவீதா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் போட்டிகள் நடைபெற்றது

தமிழ்நாடு இலக்குப்பந்து கழகமும், சவீதா உடற்கல்வியியல் கல்லூரியும் இணைந்து நடத்திய மாநில அளவிலான முதலாம் ஆண்டு சப் ஜூனியர் ஆடவர் மற்றும் மகளிருக்கான இலக்குப்பந்து போட்டி மற்றும் நடுவர் தேர்வு சவீதா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2021-2022 க்கான போட்டிகள் நடைபெற்றது.

இப்போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 16 ஆடவர் அணி களும் 12 மகளிர் அணியும் கலந்து கொண்டனர். இப்போட்டியை சவீதா பல்கலைக் கழகத்தின் விளையாட்டுத்துறை தலைவர் வெ.வாழ்வீமராஜா  துவக்கி வைத்தார். இவருடன் மாநில பொதுச்செயலாளர்  ஜமால் ஷரிப் கபா, அமைப்பு செயலாளர்  சு.மோகனசுந்தரம்,  நா.கார்த்திகேயன், ச.தாமோதரன் சவீதா, விஜய் அமிர்தராஜ் உடற்கல்வியியல் கல்லூரி மற்றும் இலக்குப்பந்து கழகத்தின் அனைத்து மாவட்ட செயலாளர்களும் உடனிருந்தனர்.

இப்போட்டியில் ஆடவர் பிரிவில் கோவை மாவட்ட அணி முதல் இடத்தையும் திருவள்ளூர் மாவட்ட அணி இரண்டாம் இடத்தையும் ராணிப்பேட்டை மாவட்ட அணி மூன்றாம் இடத்தையும் சென்னை மாவட்ட அணி நான்காம் இடத்தையும் தட்டிச் சென்றது. மகளிர் பிரிவில், சென்னை மாவட்ட அணி முதல் இடத்தையும் கோவை மாவட்ட அணி இரண்டாம் இடத்தையும் மூன்றாம் இடத்தை திருவள்ளுவர் மாவட்டம் மற்றும் நான்காம் இடத்தை ராணிப்பேட்டை மாவட்டம் தட்டிச்சென்றது. வெற்றி பெற்ற வீரர், வீரங்கனைகளுக்கு விளையாட்டுத்துறை தலைவர் வெ.வாழ்வீமராஜா பரிசுக்கோப்பைகளையும், சான்றிதழ்களையும், தேர்ச்சி பெற்ற நடுவர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்கி சிறப்பித்தார். மற்றும் பங்கு பெற்ற அனைத்து இலக்குப்பந்து வீரர் வீராங்கனைகளை இலக்குப்பந்து கழகத்தின் சார்பாக பொதுச்செயலாளர் முனைவர் ஜமால் ஷரிப் கபா நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.

Tags:    

Similar News