தென் மண்டல கிரிக்கெட் போட்டியில் எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகம் சாம்பியன்
தென் மண்டல கிரிக்கெட் போட்டியில் எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகம் சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.;
சாம்பியன் பட்டத்துக்கான பரிசு கோப்பையுடன் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக மாணவர்கள்.
சென்னை சந்தோஷபுரத்தில், தென் மண்டல டி20 சார்பில் தென்னிந்திய அளவிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. 30 அணிகள் பங்கேற்ற போட்டியில் எஸ்.ஆர்.எம்.பல்கலைகழக மாணவர்கள் கலந்து கொண்டு விளையாடினர்.
அதன் இறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் எஸ்.ஆர்.எம். மற்றும் கேக் பாய்ண்ட் இரு அணிகள் எதிர்கொண்டன. முதலில் விளையாடிய எஸ்.ஆர்.எம். அணி 156 ரன்கள் எடுத்தது, பின்னர் ஆடிய கேக் பாயிண்ட் அணி 117 ரன்னில் சுருண்டது.
எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் வெற்றிக் கோப்பையை தட்டிச் சென்றது, ஒரு லட்ச ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது. ஆட்ட நாயகன், தொடர் நாயகன் விருதையும் பெற்றனர்.
இரண்டாம் பரிசை கேக் பாயிண்ட் அணி வென்றது ரூ. 50000 பரிசுத்தொகையை பெற்றனர்.
முதல் பரிசை தட்டிச் சென்ற எஸ்.ஆர்.எம்.மாணவர்கள் கல்லூரி நிர்வாகம் அளித்த பயிற்சியும், வசதிகளும் தான் தங்களை வெற்றிப் பெற செய்ததாக கூறினர்.