சேறும் சகதியுமாக காணப்படும் கொட்டிவாக்கம் ஒய்.எம்.சி.ஏ பள்ளி
கொட்டிவாக்கம் ஒய்.எம்.சி.ஏ. பள்ளியில் சேறும் சகதியுமாய் காணப்படுவதால் நோய் தொற்று பரவும் அபாயம்.;
கொட்டிவாக்கம் ஒய்.எம்.சி.ஏ. பள்ளியில் சேறும் சகதியுமாய் காணப்படுவதால் நோய் தொற்று பரவும் அபாயம்.
சென்னை பழைய மகாபலிபுர சாலை, கொட்டிவாக்கத்தில் செயல்பட்டுவரும் ஒய்.எம்.சி.ஏ. பள்ளியில் சமீபத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த கனமழையின் காரணமாக மழை நீர் தேங்கி வெளியில் செல்ல முடியாமல், மழை விட்டும் மழை நீர் சிறிதளவு தேங்கி பள்ளி வளாகம் முழுவதும் சேறும், சகதியுமாக காணப்படுகிறது.
இதனால் நோய் தொற்று பரவி சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. ஆகவே மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக இதனை சரிசெய்து மாணவர்களின் சுகாதாரத்தை காத்திட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.