கிழக்கு கடற் கரை சாலையில் முறைகேடாக நடத்தப்பட்ட மதுக் கூடங்களுக்கு சீல்
கிழக்கு கடற் கரை சாலையில் முறைகேடாக நடத்தப்பட்ட மதுக் கூடங்களுக்கு சீல் வைக்கப்பட்டது.;
சென்னை, கிழக்கு கடற்கரை சாலை, ராஜிவ்காந்தி சாலையில் டாஸ்மாக் அருகில் அனுமதியின்றி மதுக்கூடங்கள் நடத்தப்படுகிறது. அங்கு சுகாதார மற்ற பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், டாஸ்மாக் மது பாட்டில்கள் இரவு நேரங்களில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன என பல்வேறு புகார்கள் எழுந்தன.
இந்நிலையில், டாஸ்மாக் மாவட்ட மேலாளர் மகேஸ்வரி தலைமையில், அடையாறு கலால் பிரிவு போலீசார் கொண்டு குழு அதிரடி ஆய்வு மேற்கொண்டது.
ராஜிவ்காந்தி சாலையில், சோழிங்கநல்லுார், காரப்பாக்கம், துரைப்பாக்கம், பெருங்குடி, கிழக்கு கடற்கரை சாலையில் நீலாங்கரை, பாலவாக்கம், கொட்டிவாக்கம் ஆகிய பகுதிகளில் நடத்திய அதிரடி சோதனையில் எட்டு மதுக்கூடங்கள் அனுமதியின்றி இயங்கியது தெரியவந்தது. அவற்றிற்கு சீல் வைக்கப்பட்டன. மேலும், மதுக்கூட ஊழியர்கள் மீது கலால் பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.