தூய்மை பெண் ஊழியர்களை கொண்டு மூன்று இடங்களில் திறக்கப்பட்ட உணவகம்
உணவகத்தில் பணிபுரியும் தூய்மை பெண் ஊழியர்களை கொண்டு ஒரே நாளில் மூன்று இடங்களில் உணவகம் திறக்கப்பட்டது.;
செங்கல்பட்டு மாவட்டம், சோழிங்கநல்லூர் பழைய மகாபலிபுரம் சாலை கந்தன்சாவடியில் அம்சம் உணவத்தின் திறப்பு விழா நடைபெற்றது.
நிறுவன தலைவர்கள் ராம் குமார் மற்றும் கணேஷ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உணவகத்தில் பணிபுரியக் கூடிய தூய்மை பெண் பணியாளர்களை கொண்டு உணவகமானது ரிப்பன் வெட்டி திறக்கப்பட்டது. பின்னர் உணவு சமைக்கும் ஊழியர்களை கொண்டு குத்துவிளக்கு ஏற்றப்பட்டது.
தமிழர்களின் பாரம்பரிய வீட்டு உணவுகளை மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடும், தங்களிடம் பணிபுரியும் ஊழியர்களை கௌரவிக்கும் விதமாக இன்று ஓரே நாளில் நீலாங்கரை, காரப்பாக்கம் மற்றும் கந்தன்சாவடி என மூன்று இடங்களில் நிறுவன தூய்மை பணியாளர்களை கொண்டு உணவத்தை தொடங்கியதாக நிறுவனத் தலைவர்கள் ராம்குமார் மற்றும் கணேஷ் தெரிவித்துக் கொண்டனர்.