நோய்பரப்பும் பள்ளிக்கரணை தெருக்கள்: மழைநீரை அகற்ற இன்னும் மனமில்லையா?

பள்ளிகரணையில் தெருக்களில் தேங்கி நிற்கும் மழை நீரால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Update: 2021-12-16 11:00 GMT

பள்ளிக்கரணை தெருக்களில் தேங்கியுள்ள மழைநீர்.

சென்னை பள்ளிகரணை, கோவலன் நகர், 6வது குறுக்குத் தெருவில் சுமார் 50க்கும் மேற்பட்ட் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். சமீபத்தில் பெய்த வடகிழக்கு பருவ மழையின் காரணமாக புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி நின்றது. பின்னர் மழை விட்ட உடன் தேங்கிய நீர் அகற்றப்பட்டது.
ஆனால்,  பள்ளிகரணை கோவலன் நகரில் மட்டும், தற்போது வரை ஒரு மாத காலமாக மழை நீர் அகற்றப்படாமல் அப்படியே இருந்து.  தற்போது கருப்பு நிறத்தில் சாக்கடையாகவே சாலையில் தேங்கி நிற்கிறது. அப்பகுதி மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட இந்த கழிவுநீரிலே செல்லக்கூடிய நிலைதான் உள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது.
பெருங்குடி மண்டல மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக சாக்கடை அடைப்பை சரிசெய்து, தெருக்களில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்றி, நோய்த்தொற்று பரவாமல் இருக்க, சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் பலமுறை மாநகராட்சியில் புகார் தெரிவித்தும் அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். 

Tags:    

Similar News