ஓ.எம்.ஆர்.சாலையில் புதிதாக மதுக்கடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
பெண்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் புதிதாக அமைய உள்ள கடையின் முன்பு திரண்டு மதுக்கடையை திறக்க எதிர்ப்பு;
ஓ.எம்.ஆர்.சாலையில் புதிதாக மதுக்கடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்.
சென்னை பழையமகாபலிபுரcd சாலை, கந்தன் சாவடி, திருவள்ளுவர் நகர், பர்மா காலனியில் புதிதாக மதுக்கடை திறப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன.இதனையறிந்த அப்பகுதி பெண்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் புதிதாக அமைய உள்ள கடையின் முன்பு திரண்டு நின்று மதுக்கடை இங்கு திறக்ககூடாது என போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலை மறியலில் ஈடுபட போவதாக கூறி சென்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.மேலும் இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் கையொப்பமிட்டு புகாரளிக்க உள்ளதாக கூறி கலைந்து சென்றனர்.