கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட வாலிபர்களுக்கு போலீஸ் வலை வீச்சு
செங்கல்பட்டு அருகே கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.;
சென்னையை அடுத்த ஒட்டியம்பாக்கம் பகுதியில் ஒரு வீட்டை 5 போ் கும்பல் சூழ்ந்து கொண்டு கதவை உடைப்பதாக சென்னை காவல் கட்டுபாட்டு அறைக்கு அப்பகுதி மக்கள் இன்று காலை தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து பெரும்பாக்கம் போலீசாா் நீண்ட நேரமாக தேடி ஒட்டியம் பாக்கத்தில் உள்ள வந்த வீட்டை தேடி கண்டுப்பிடித்து வந்தனா்.
பெரும்பாக்கம் போலீஸ் விசாரணையில் கடந்த 3 மாதங்களாக ஒட்டியம்பாக்கத்தில் ஒரு வாடகை வீட்டில் சிரில்(25) என்ற இளைஞா் வசித்து வந்தாா்.அவா் டேட்டோ எண்ட்ரி போடும் வேலை செய்து வருவதாகவும்,அவருடைய நண்பா் காா்த்திக்குடன் அங்கு தங்கியிருந்ததாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் நேற்றிரவு அவருடைய நண்பர் கார்த்திக் என்பவருடன் சிரீல் வீட்டில் உறங்கி கொண்டிருந்தாா். இன்று காலை இவர்களை தேடிக்கொண்டு வந்த சுமார் 5 பேர் கொண்ட கும்பல் வீட்டின் கதவை தட்டியுள்ளனர்.
இந்நிலையில் சிரீல் மற்றும் கார்த்திக்கை சிலர் தேடுவதை அறிந்து இருவரும் பின்பக்கத்து வழியாக தப்பியோடிவிட்டனா்.
5 போ் கும்பல் இருவரையும் விரட்டி பிடிக்க முயன்றும் முடியவில்லை. இதையடுத்து அந்த கும்பல் வீட்டிற்குள் சென்று அனைத்து பொருட்களையும் கலைத்து போட்டுவிட்டு சென்றுவிட்டனா்.
அதன்பின்பு அங்கு வந்த பெரும்பாக்கம் போலீசாா்,அந்த வீட்டில் நடத்திய சோதனையில் ஜெராக்ஸ் ரூபாய் நோட்டுகள் பெருமளவு இருந்ததை கண்டு அதிா்ச்சியடைந்தனா்.500, 100, 50 ரூபாய் நோட்டுகள் ஜெராக்ஸ் ரூபாய் நோட்டுகளும்,அதோடு ஜெராக்ஸ் எடுக்கப்பட்டு காய வைக்கப்பட்டிருந்த ரூபாய் நோட்டுகளையும் பறிமுதல் செய்தனா்.
500 ரூபாய் ஜெராக்ஸ் நோட்டுகள் 100, 100 ரூபாய் ஜெராக்ஸ் நோட்டுகள் 25, மற்றும் 50 ரூபாய் ஜெராக்ஸ் நோட்டுகள் 150 இருந்ததை போலீசாா் கைப்பற்றினா்.
இச்சம்பவம் குறித்து பெரும்பாக்கம் போலீசாா் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள சிரீல், கார்த்திக் இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
அதோடு ஜெராக்ஸ் எடுக்கப்பட்ட ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடுபட்டதா ? இதுவரை எவ்வளவு ஜெராக்ஸ் நோட்டுகளை புழக்கத்தில் விட்டுள்ளனர் ? யார் யார் இதன் பின்னனியில் உள்ளனர் என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதோடு அதிகாலையில் இந்த வீட்டிற்கு வந்த 5 போ் கும்பலை சோ்ந்தவா்கள் யாா்? எதற்காக வந்தனா்.அவா்களுக்கும் இந்த ஜெராக்ஸ் நோட்டு தயாரித்தவா்களுக்கும் என்ன தொடா்பு என்றும் விசாரணை நடத்துகின்றனா்.