கண்ணகி நகரில் வழக்குகளில் தொடர்புடைய 70 பேருக்கு தீபாவளி பரிசு வழங்கிய போலீஸ்

கண்ணகி நகரில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 70 பேருக்கு தீபாவளி பரிசுகளை போலீசார் வழங்கினர்.;

Update: 2021-11-02 18:53 GMT

கண்ணகி நகரில் குற்றவாளிகளுக்கு தீபாவளி பரிசுகளை போலீசார் வழங்கினர்.

சென்னை கண்ணகி நகரில், அடிதடி, கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 70 பேரை, காவல் நிலையம் அழைத்து, துரைப்பாக்கம் உதவி ஆணையர் ரவி மற்றும் கண்ணகி நகர் காவல் ஆய்வாளர் ஆல்பின்ராஜ் ஆகியோர் அவர்களுக்கு அறிவரை வழங்கி, தீபாவளியன்று எவ்வித அசம்பாவித சம்வங்களில் ஈடுபட கூடாது எனவும், தீபாவளியை கொண்டாடும் நபர்களுக்கு இடையூறாக இருக்கக் கூடாதெனவும், கூறி அவர்களுக்கு தீபாவளி வாழ்த்துக் சொல்லி அனைவருக்கும் இனிப்பு வழங்கி மகிழ்வித்தனர்.
வந்திருந்த பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்கள், இதுவரை போலீசார் எங்களை இது போன்று நடத்தியதில்லை என்று நெகிழ்ந்து போய் போலீசாரிடம் கை குலுக்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 

Tags:    

Similar News