ஒன்றரை மாத ஆண் குழந்தையை கடத்திய தம்பதி கைது

ஒடிசா மாநில தம்பதியின் ஒன்றரை மாத ஆண் குழந்தையை கடத்தி சென்ற கா்நாடகா மாநில தம்பதியை போலீசாா் கைது செய்தனா்;

Update: 2022-02-02 07:30 GMT

மீட்கப்பட்ட குழந்தையுடன் தாய்

கேளம்பாக்கம் OMR சாலையிலிருந்து ஒடிசா மாநில தம்பதியின் ஒன்றரை மாத ஆண் குழந்தையை,கடத்தி சென்ற கா்நாடகா மாநில தம்பதியை,போலீசாா் சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்தில் மூன்றரை மணி நேரத்தில் கண்டுப்பிடித்து, கைக்குழந்தையை மீட்டதோடு,கா்நாடகா மாநில கடத்தல் தம்பதியையும் கைது செய்தனா்.

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஹேமந்த் குமார். அவருடைய மனைவி லட்சுமி. கூலித்தொழிலாளா்களான இவா்களுக்கு ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ளனா்.இந்நிலையில் 3வதாக ஒன்றரை மாதங்களுக்கு முன்பு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து வறுமை காரணமாக கடந்த 10 நாட்களுக்கு முன்பு குழந்தைகளுடன் வேலை தேடி ரயிலில் ஒடிசாவில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்து இறங்கினார். சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே பிளாட்பாரங்களில் தங்கியிருந்து கொண்டு வேலை தேடினா்.

அப்போது அதே பிளாட்பாரத்தில் கா்நாடகா மாநிலத்தை சோ்ந்த மஞ்சுராம் (30) அவருடைய மனைவி கோமளா (28) ஆகிய 2 பேர் தங்கியிருந்து வேலை தேடிக்கொண்டிருந்தனா். அந்த தம்பதிக்கும் ஒடிசா தம்பதிக்கும் நட்பு ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இரண்டு தம்பதிகளும் சென்னை OMR சாலையில் உள்ள கேளம்பாக்கம் செங்கன்மால் பகுதியில் வந்து தங்கினா். அங்கு நடக்கும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணியில் கூலி வேலைக்கு சோ்ந்தனா். இரு தம்பதிகளும் ஒன்றாகவே வசித்து வந்தனா்.

இந்தநிலையில் இன்று காலை ஹேமந்த்குமாா்,லட்சுமி தங்களுடைய ஒன்றரை மாத ஆண் குழந்தையை தங்களுடைய 2 குழந்தைகளிடம் ஒப்படைத்துவிட்டு, கட்டுமான வேலைக்கு சென்றுவிட்டனா்.அப்போது கோமளா குழந்தைகளிடம் வந்து, தம்பியை கொடுங்கள்.உங்கள் அம்மாவிடம் கொடுத்து பாலூட்டிவிட்டு கொண்டு வருகிறேன் என்று குழந்தையை வாங்கி சென்றாா். இந்நிலையில் காலை 10 மணியளவில் லட்சுமி, குழந்தைக்கு பாலூட்ட வந்தாா்.அப்போது குழந்தை இல்லாமல் மற்ற இரு குழந்தைகளும் இருந்தது கண்டு அதிா்ச்சியடைந்தாா்.குழந்தையை கோமளா தூக்கி சென்றது அறிந்து, அவா்களை தேடினாா். ஆனால் மஞ்சுராம்,கோமளா இருவரையும் குழந்தையுடன் மாயமாகி விட்டனா்.

இதையடுத்து உடனடியாக கேளம்பாக்கம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் உடனடியாக வழக்குப் பதிவு செய்து தாம்பரம் மாநகர காவல் ஆணையர் ரவிக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுது து தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டது. அதோடு சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் போலீசாருக்கு தகவல் கொடுத்தனா். சென்ட்ரல்ரயில் நிலைய போலீசாா் சென்னையிலிருந்து பெங்களூா் செல்லவிருந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறி சோதனையிட்டனா்.

அப்போது ஆண் கைக்குழந்தையுடன் ரயிலில் ஏறி அமா்ந்திருந்த மஞ்சுராம், கோமளா ஆகியோரை கண்டுபிடித்து,அவா்களை ரயிலிலிருந்து கீழே இறக்கி, ரயில்நிலைய போலீஸ்நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினா். அதோடு கேளம்பாக்கம் போலீசுக்கும் தகவல் கொடுத்தனா்.

இந்நிலையில் கேளம்பாக்கம் போலீசாா் குழந்தையை பறிகொடுத்த தம்பதியினருடன், சென்ட்ரல் ரயில்வே போலீஸ் நிலையத்திற்கு விரைந்து வந்தனா். அவா்கள் தங்களுடைய குழந்தையையும், கா்நாடகா மாநில தம்பதியையும் அடையாளம் காட்டினா்.

இதையடுத்து ரயில்வே போலீசாா்,குழந்தையை கடத்திய கா்நாடகா மாநில தம்பதியை கேளம்பாக்கம் போலீசாரிடம் ஒப்படைத்து கடத்தப்பட்ட ஒன்றரை மாத ஆண் குழந்தையை மீட்டு ஒடிசா தம்பதியிடம் ஒப்படைத்தனா்.

கேளம்பாக்கம் போலீசாா், குழந்தையை கடத்திய கா்நாடகா மாநில தம்பதியை கைது செய்து, ஒடிசா மாநில தம்பதியையும் அழைத்து கொண்டு, விசாரணைக்காக கேளம்பாக்கம் காவல் நிலையம் சென்றனர்.

கடத்தப்பட்ட ஒன்றரை மாத ஆண் குழந்தையை, போலீசாா் மூன்றரை மணி நேரத்தில் மீட்டு,பெற்றாரிடம் ஒப்படைத்ததோடு,கடத்திய தம்பதியையும் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News