சென்னை பெரும்பாக்கம் அருகே 30 கிலோ கஞ்சா கடத்தி வந்த நபர் கைது

காரின் மறைவான இடங்களில் கஞ்சாவை பதுக்கி வைத்து கஞ்சா கடத்தி வந்த நபர் கைது. 30 கிலோ கஞ்சா பறிமுதல்;

Update: 2021-12-25 05:30 GMT

சென்னை பெரும்பாக்கம் எட்டடுக்கு பகுதியில் இளைஞர்கள் அதிகம் கஞ்சா பழக்கத்திற்கு ஆளாகி, கஞ்சா புழக்கமும் அதிகமிருந்தது, இதனை கட்டுப்படுத்த பெரும்பாக்கம் எட்டடுக்கில் கஞ்சா புகைக்கும் இளைஞர்களை கண்டறிந்து, பெரும்பாக்கம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திருநாவுக்கரசு தலைமையில் முதல் நிலை காவலர் ரவி வர்மன், முகிலன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தொடர்ந்து கண்காணித்து வந்து பெரும்பாக்கம் பகுதிக்கு கஞ்சா விற்பனை செய்து வந்த ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த பாலமுருகன்(33), என்பவரை கைது செய்தனர்.
பாலமுருகன் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து, காரின் மறைவான இடங்களில் பதுக்கி வைத்து போலீசாரின் சோதனையில் சிக்காமல் கஞ்சா விற்பனையை கன ஜோராக செய்து வந்துள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் பெரும்பாக்கம் தேவாலயம் அருகே வந்த காரை மடக்கி சோதனை செய்ததில் காரின் மறைவான இடங்களில், சீட்டுக்கு அடியில், கதவுகளின் பக்கவாட்டில், பம்பர் இடுக்குகள் என மறைத்து வைத்து கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 30கிலோ கஞ்சா மற்றும் காரை பறிமுதல் செய்து அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். 

Tags:    

Similar News