மடிப்பாக்கத்தில் ஆஞ்சநேயர் சிலையை திருடிய நபர் கைது
மடிப்பாக்கத்தில் கோயிலில் ஆஞ்சநேயர் சிலையை திருடிய நபர் கைது செய்யப்பட்டு வெண்கல சிலை பறிமுதல்.;
சென்னை மடிப்பாக்கம் அடுத்த உள்ளகரம் ஆஞ்சநேயர் கோயில் தெருவில் உள்ள, ஆஞ்சநேயர் கோயிலில் 1½ அடி ஆஞ்சநேயர் சிலை கடந்த 2ம் தேதி கோவிலுக்கு சென்ற போது காணாமல் போனதாக கோயில் நிர்வாகி குருராஜன் மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து தேடி வந்த நிலையில் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ஆஞ்சநேயர் சிலையை திருடிய வேப்பூர் பகுதியை சேர்ந்த ராஜா(எ)ஐசக்(34), என்பவரை கைது செய்து அவரிடமிருந்து வெண்கல ஆஞ்சநேயர் சிலையை பறிமுதல் செய்தனர்.
இவர் மீது ஏற்கனவே பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் சிலை திருட்டு வழக்கு உள்ளது விசாரணையில் தெரியவந்தது. அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவ்வழக்கில் மேலும் தொடர்புடைய சுருட்டை முருகன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.